Skip Navigation

National Geographic Society Este programa se distribuye en los Estados Unidos y Canadá por National Geographic y EHD. [obtenga más información]

DVD ilustrado plurilingüe

La biología del desarrollo prenatal




பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி

.தமி [Tamil]


 

Descargar versión en formato PDF  ¿Qué es PDF?
 

El período embrionario (Las primeras 8 semanas)

Desarrollo embrionario: Las primeras 4 semanas

Capítulo 3   Fecundación

உயிரியலின் படி, "மனித வளர்ச்சி கருத்தரிப்பின் போதே தொடங்குகிறது," ஒரு பெண்ணும் ஆணும் தத்தம் 23 கிரோமோஸோம்களின் இணைப்பை தமது இனப்பெருக்க செல்களின் இணைப்பின் மூலம் நிகழ்த்துகின்றனர்.

ஒரு பெண்ணின் இனப்பெருக்க செல் பொதுவாக "கரு முட்டை" எனப்படுகிறது ஆனால் இதற்கான சரியான உயிரியல் சொல் ஊஸைட் என்பதாகும்.

அதுபோலவே, ஒரு ஆணின் இனப்பெருக்க செல் பொதுவாக "விந்து" எனப்படுகிறது ஆனால் இதன் உயிரியல் பெயர் ஸ்பர்மடோஸூன் என்பதாகும்.

ஒரு பெண்ணின் கருப்பையிலிருந்து ஊஸைட் வெளியாகும் நிகழ்வு ஓவ்யுலேஷன் எனப்படுகிறது, ஊஸைட்டும் ஸ்பர்மடோஸூனும் கர்ப்பப்பையின் குழாய் ஒன்றினுள் இணைகின்றன. இக்குழாய்கள் பொதுவாக ஃபாலோப்பியன் குழாய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கருப்பையின் குழாய்கள் ஒரு பெண்ணின் கருப்பைக்கும் அவளது கர்பப்பைக்கும் இணைப்பு ஏற்படுத்துகின்றன.

இந்நிகழ்வின் மூலம் உருவாகும் ஒற்றை உயிரணு கரு ஸைகோட் எனப்படுகிறது, இதன் பொருள் "இணைக்கப்பட்டது" என்பதாகும்.

Capítulo 4   ADN, división celular y factor temprano de embarazo

ஸைகோட்டின் 46 கிரோமோஸோம்கள் ஒரு மனிதனின் மரபணு விவரணத்தின் தனிப்பட்ட முதற் பதிப்பாகிறது. இது இறுக்கிச் சுற்றப்பட்ட அணு மூலக்கூறான டி.என்.ஏ-வில் பதிந்துள்ளது. இவை முழு உடல் வளர்ச்சிக்கான குறிப்புகளைக் கொண்டுள்ளன.

டி.என்.ஏ அணுக்கள் ஒரு திரிக்கப்பட்ட ஏணியைப் போன்று காணப்பட்டு இரட்டை ஹெலிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஏணியின் படிகள் இரட்டை அணுக்களாலோ, அல்லது குவனைன், ஸைடோஸைன், அடினைன், தைமின் போன்ற தளப்பொருட்களாலோ ஆனவை.

குவனைன் ஸைடோஸைனுடன் மட்டுமே இணையும், அடினைன் தைமினுடன் மட்டுமே இணையும். ஒவ்வொரு மனித செல்லும் ஏறத்தாழ 3 பில்லியன் இது போன்ற தளஜதைகளைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு செல்லில் உள்ள டி.என்.ஏ-வும் அநேக தகவல்களை அடக்கியுள்ளது இதனை சொற்களால் வர்ணிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு தளத்தின் முதல் எழுத்தைப் பட்டியலிடவே 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்கங்கள் தேவை!

ஒரு முனையிலிருந்து மறு முனைவரை, ஒரு செல்லிலுள்ள டி.என்.ஏ-வின் நீளம் 3 1/3 அடி அல்லது 1 மீட்டர் ஆகும்.

ஒரு மனித உடலிலுள்ள 100 ட்ரில்லியன் செல்களிலுள்ள அனைத்து டி.என்.ஏ-க்களையும் விரித்தால், அதன் நீளம் 63 பில்லியன் மைல்களாகும். இது பூமியிலிருந்து சூரியனுக்கு 340 முறைகள் சென்று திரும்பும் தூரம் ஆகும்.

கருத்தரித்த 24-லிருந்து 30 மணி நேரத்துக்குள், ஸைகோட்டின் முதல் செல் பிளவு முடிகிறது. மைட்டாஸிஸ் என்ற இந்த செய்கையின் மூலம், ஒரு செல் இரண்டாக, இரண்டு நான்காக என இவ்வகையில் பல்கிப் பெருகுகிறது.

கருத்தரித்த 24-லிலிருந்து 48 மணி நேரத்திற்குள், ஒரு ஹார்மோனை கண்டறிவதன் மூலம் கர்ப்பத்தை உறுதி செய்யலாம். இது தாயின் குருதியிலுள்ள "தொடக்க கருத்தரித்தல் காட்டி" என்பதாகும்.

Capítulo 5   Etapas iniciales (mórula y blastocito) y células madre

கருத்தரித்த 3-லிருந்து 4 நாட்களுக்குள், கருவின் பிளக்கும் செல்கள் ஒரு கோள வடிவத்தை அடைகின்றன. இந்நிலையில் உள்ள கரு மோருலா எனப்படுகிறது.

4-லிருந்து 5 நாட்களுக்குள், மோருலாவிற்குள் ஒரு வெற்றிடம் உருவாகிறது. இந்நிலையில் உள்ள கரு பிளாஸ்டோசிஸ்ட் எனப்படுகிறது.

பிளாஸ்டோசிஸ்டிலுள்ள செல்கள் உள்ளடங்கிய செல் பிண்டம் என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்குத் தேவையான தலை, உடல் மற்றும் பிற அமைப்புகளை அளிக்கிறது.

உள்ளடங்கிய செல் பிண்டத்திலுள்ள செல்கள் எம்பிரியோனிக் ஸ்டெம் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை ஒவ்வொன்றும் 200-க்கும் மேற்பட்ட செல் வகைகளை உருவாக்கும் திறமை படைத்தவை.

Capítulo 6   1 a 1½ semanas: implantación y gonadotropina coriónica humana (GCH)

கர்ப்பப்பையின் குழாயினுள் பயணம் செய்யும் ஆரம்ப கால கரு தாயின் கர்பப்பையின் உட்சுவற்றில் தன்னைப் பதித்துக்கொள்கிறது. பதித்தல் என்றழைக்கப்படும் இச்செயல் கருவுற்ற 6-வது நாளில் தொடங்கி 10 முதல் 12 நாட்களில் நிறைவு பெறுகிறது.

வளரும் கருவின் செல்கள் வெளிப்படுத்தும் ஒரு ஹார்மோன் மனித கோரியானிக் கொனடோடிராபின் அல்லது ஹெச்.சி.ஜீ எனப்படுகிறது. இது அநேக கருப்பரிசோதனைகளில் கண்டறியப்படுகிறது.

ஹெச்.சி.ஜீ தாயின் ஹார்மோன்களை இயக்கி மாதவிடாய் சுழற்சியை இடைமறித்து, கரு வளர்ச்சியை தொடரச் செய்கிறது.

Capítulo 7   La placenta y el cordón umbilical

பதித்தலைத் தொடர்ந்து, பிளாஸ்டோசிஸ்டின் வெளிப்புறம் உள்ள செல்கள் பிளாசென்டா என்ற அமைப்பின் ஒரு பகுதியை உருவாக்குகின்றன. இது தாய் மற்றும் கருவின் குருதி ஓட்ட அமைப்புகளை இணைக்கிறது.

பிளாசென்டா தாயிடமிருந்து பிராணவாயு, போஷாக்கு, ஹார்மோன்கள், மருந்துகள் ஆகியவற்றை வளரும் குழந்தைக்கு அளிக்கிறது; கழிவுப் பொருட்களை அகற்றுகிறது; தாயின் குருதி கருவின் மற்றும் சிசுவின் குருதியுடன் கலந்துவிடாமல் தடுக்கிறது.

பிளாசென்டா உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் கருவின் மற்றும் சிசுவின் உடல் வெப்ப நிலையை தாயின் உடல் வெப்ப நிலையை விட சற்று அதிகமாக நிலைப்படுத்துகிறது

பிளாசென்டா வளரும் சிசுவுடன் தொப்புள் கொடியின் மூலம் தொடர்பு கொள்கிறது.

பிளாசென்டாவின் உயிர் காக்கும் திறமைகள் நவீன மருத்துவமனைகளிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளை விடச் சிறந்தவை.

Capítulo 8   Nutrición y protección

ஒரு வாரத்திற்குள், உள்ளடங்கிய பிண்டத்தின் செல்கள் இரண்டு அடுக்குகளை உருவாக்குகின்றன. அவை ஹைப்போபிளாஸ்ட் மற்றும் எப்பிபிளாஸ்ட் எனப்படும்.

ஹைப்பொபிளாஸ்ட் கரு உறையை உருவாக்குகிறது. இதன் மூலம் தாய் போஷாக்கை ஆரம்பகால கருவுக்கு அளிக்கிறாள்.

எப்பிபிளாஸ்டின் செல்கள் ஆம்னியான் என்ற சவ்வை உருவாக்குகின்றன. இதனுள் கருவும் பின்பு சிசுவும் பிறந்து வெளிவரும் வரை வளர்கின்றன.

Capítulo 9   2 a 4 semanas: capas germinales y formación de órganos

ஏறத்தாழ 2 ½ வாரங்களில், எப்பிபிளாஸ்ட் 3 பிரத்யேக சவ்வுகளை அல்லது கிருமி அடுக்குகளை உருவாக்குகிறது. இவை எக்ட்டோடர்ம், எண்டோடர்ம், மற்றும் மீஸோடர்ம் எனப்படும்.

எக்ட்டோடர்ம் பல்வேறு அமைப்புகளை உருவாக்குகிறது. இதில் மூளை, முதுகுத் தண்டு, நரம்புகள், தோல், நகங்கள், மற்றும் முடி ஆகியவை அடங்கும்.

எண்டோடர்ம் ஸ்வாச அமைப்பின் உட்படையையும் செரிமானப் பாதையையும், மற்றும் முக்கிய உறுப்புகளின் சில பகுதிகளையும் உருவாக்குகிறது. இவ்வுருப்புகள் கல்லீரல், மற்றும் கணையம் ஆகும்.

மீஸோடர்ம் இதயம், சிறுநீரகம், எலும்புகள், குருத்தெலும்பு, தசைகள், இரத்த அணுக்கள், மற்றும் பிற அமைப்புகளை உருவாக்குகின்றன.

3 வாரங்களில் மூளை 3 முக்கிய பகுதிகளாகப் பிரிகிறது. இவை முன்பகுதி, நடுப்பகுதி, மற்றும் பின்பகுதி ஆகும்.

சுவாசம் மற்றும் செரிமான அமைப்புகளின் வளர்ச்சியும் இப்பொழுது நடைபெறுகிறது.

முதல் இரத்த அணுக்கள் கரு உறையில் தோன்றுகையில், இரத்த நாளங்கள் கரு முழுவதும் உருவாகி, குழாய் வடிவ இதயம் தோன்றுகிறது.

ஏறத்தாழ அதே நேரத்தில், வேகமாக வளரும் இதயம் தனக்குள் மடிகிறது. அதனுள் தனித்தனி அறைகள் வளரத் தொடங்குகின்றன.

இதயத் துடிப்பு கருவுற்ற 3 வாரங்கள் மற்றும் 1 நாளில் தொடங்குகிறது.

இரத்த ஓட்ட அமைப்பு தான் உடலில் முதன்முதலாக இயங்கத் தொடங்கும் அமைப்பாகும்.

Capítulo 10   3 a 4 semanas: el plegamiento del embrión

3 முதல் 4 வாரங்களுக்குள், உடல் அமைப்பு உருவாகி மூளை, முதுகுத் தண்டு, மற்றும் கருவின் இதயம் ஆகியவை கரு உறையை ஒட்டி காணப்படுகின்றன.

வேகமான வளர்ச்சி தட்டையான கருவை மடங்கச் செய்கிறது. இச்செய்கை கரு உறையின் ஒரு பகுதியை செரிமான அமைப்பின் உட்படைக்குள் இணைத்து மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியை உருவாக்குகின்றன.